புழல் மத்திய சிறைச்சாலை சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை நகரில் இருந்து சுமார் 45 கிமீ தொலைவில் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை வளாகம் என்ற பெயரை புழல் சிறை பெற்றுள்ளது. இது 2006ஆம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்டது. இந்தச் சிறையில் 3000 கைதிகளை சிறை வைக்கும் வசதி உள்ளது. இந்தச் சிறை வளாகம் சுமார் 212 ஏக்கர் (0.86 கிமீ 2) பரப்பளவில் அமைந்துள்ளது. இது 77.09 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இது 26 நவம்பர் 2006 அன்று தமிழ்நாட்டின் அன்றைய முதல்வர் மு. கருணாநிதியால் தொடக்கி வைக்கப்பட்டது
புழல் சிறையில் மூன்று பிரிவுகளில் 4000 மேற்பட்ட சிறைவாசிகள் இருக்கின்றனர்.
மூன்று பிரிவுகளில் ஒரு பிரிவான தண்டனை பிரிவில் பழைய காகிதங்கள் அரைத்து அட்டை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது இந்த இடத்தில் திடீரென்று புகை உண்டாகியுள்ளது. இதை அறிந்தவர்கள் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் முழுவதுமாக ஈடுபட்டனர் புகை ஏற்பட்டுள்ள இடத்தில் தண்ணீர்ரை சரமாரியாக வீசிஅடித்தும் எரியும் காகிதங்களை கட்டுப்படுத்தினர்.அங்கு ஏற்பட்ட தீ விபத்தால் சிறையில் பரபரப்பு உண்டானது.