சென்னையில் உள்ள காசிமேட்டில் மீன் பிடி துறைமுகம் உள்ளதால் காசிமேடு சந்தையில் மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது , இதனால் கூட்ட கூட்டமாக அசைவ பிரியர்கள் மீன் வாங்குவதற்காக குவிந்தனர் . மேலும் சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவ மக்களும் மீன் பிடித்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் . சாதாரணமாகவே காசிமேடு சந்தையில் மீன் வாங்குவதற்கு என மக்கள் படையெடுத்து வருவது வழக்கம் . அதிலும் இன்று ஆவணி மாதத்தின் கடைசி நாள் என்பதாலும் நாளை புரட்டாசி மாதத்தின் முதல் நாள் என்பதாலும் அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் மீன் வாங்கி செல்கின்றனர் .
இதற்கு ஏற்ப மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது . சங்கரா ரூபாய் 300க்கும் , வஞ்சிரம் ரூபாய் 500க்கும் , இறால் ரூபாய் 250க்கும் , கடமா ரூபாய் 200க்கும் , வாவல் ரூபாய் 350 க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது ….