கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. அந்த வகையில் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் என அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். தக்காளியை விட இஞ்சியின் விலை பல மடங்காக அதிகரித்து விட்டது.
கடந்த சில வாரங்களில் இஞ்சி கிலோ ரூ. 320 வரை விற்கப்பட்டது. தற்பொழுது இஞ்சியின் விலை கிலோ ரூ. 250 – க்கு விற்கப்படுகிறது. சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி கிலோ ரூ. 210 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சில்லறை மற்றும் காய்கறி கடைகளில் ரூ. 240 முதல் ரூ. 260 வரை விற்பனை செய்யப்பட்ட வருகிறது.
இந்த விலை உயர்வுக்கு முன்பு இஞ்சி கிலோ ரூ. 100 முதல் ரூ. 110 வரை விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் தேவைக்கேற்ப வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த விலை உயர்வை தொடர்ந்து இஞ்சி வாங்குவதற்கு பயப்படுகிறார்கள்.
மேலும் இந்த இஞ்சி விலை உயர்வைத் தொடர், உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் இஞ்சி பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பொதுவாகவே இஞ்சி டீ ரூ. 12 முதல் ரூ. 15 வரை விற்பனை செய்து கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது இஞ்சி டீ ரூ. 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு டீ பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.