சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார ஏற்ற இறக்கத்தின் அடிப்படையிலேயே தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் விலை அவ்வப்போது ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் எப்பொழுதுமே தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும்.
தங்கம் எப்பொழுதுமே நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு முதலீடு மற்றும் சேமிப்பில் முக்கியமாக கருதப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக ஏற்றத்துடனும் இறக்கத்துடனும் காணப்பட்டு வந்த தங்கம் விலை தற்பொழுது அதிகரித்துள்ளது.
அதன் அடிப்படையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமிற்கு ரூ. 20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,755 ஆக விற்பனையாகிறது. மேலும் ஒரு சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 46,040 ரூபாயாக விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையில் பெருமளவில் மாற்றம் இல்லை வெள்ளி கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ. 80.20 க்கும் 1 கிலோ வெள்ளி ரூ. 80 ,200 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது.