தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இருந்த போதிலும் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து காணப்பட்டு வந்தது. நேற்றைய தினம் ஆறுதல் அளிக்கும் விதமாக சவரனுக்கு ரூ. 80 குறைந்து காணப்பட்டது இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சற்று குறைந்து சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ. 80 குறைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ. 48,920 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,115 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் பெரும் அளவு மாற்றம் இல்லை வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது ஒரு கிராம் வெள்ளி ரூ. 80.30 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.