தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை இந்தியாவில் அவ்வப்பொழுது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது இருந்தபோதிலும் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 95 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ . 49, 880 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ. 50,000 – யை நெருங்கும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். வெள்ளி விலையில் பெரும் அளவில் மாற்றமில்லை வெள்ளி கிராம் ஒன்றிற்கு ஒரு ரூபாய் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 81.50 – க்கு விற்பனையாகிறது.