தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று ரூ. 160 அதிகரித்த நிலையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 49,640 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து தங்கம் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 50 ஆயிரத்து நெருங்கும் என்று மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்வைத் தொடர்ந்து வெள்ளியும் விலை அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ரூ. 80.80 – க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 80,800 – க்கு விற்பனை செய்யப்படுகிறது