மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையில் வரலாறு காணாத உச்சத்தை கட்டியது. இதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சற்று ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் விலை இன்று 50 ஆயிரத்தை எட்டி உள்ளது. மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 50 ஆயிரத்தை எட்டி உள்ளது.
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விளையும் சற்று ஏற்றத்தை கண்டுள்ளது. அதைத் தொடர்ந்து வெள்ளி கிராமிற்கு 30 பைசாக்கள் உயர்ந்து. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 80.50 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து ஒரு பார் வெள்ளியின் விலை ரூ. 80,500 – க்கு விற்பனை செய்யப்படுகிறது.