தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வந்தது. இந்த நிலையில் திடீரென கடந்த நான்கு நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து கிராம் ரூ. 7,000 க்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமா என்று மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியடைந்தது முதலே தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வருகின்ற நாட்களில் தங்கம் விலை அதிகரிக்குமா என்ற சந்தேகத்திற்கு பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில விளக்கங்களை கொடுத்துள்ளார்.
இந்தியாவில் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே தங்கம் விலை சரிவை கண்டு வருகிறது. மேலும் கடந்த 2 வாரங்களில் 22 கேரட் தங்கம் கிராமிற்கு ரூ. 200 – க்கு மேல் குறைந்துள்ளதாகவும். ஒரு கிராம் ரூ. 7000 – க்கு கீழ் விற்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இப்பொழுது வாங்கினால் நல்லதா..? அல்லது இன்னும் சிறுகாலம் கழித்து வாங்கலாமா… என்ற யோசனையில் இருக்கின்றனர். ஆனால் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தங்க விலையில் இதுவே சிறப்பான மாற்றம் தான் இன்னும் சில நாட்களுக்கு தங்கம் விலை குறையும் என்றும் இந்த நேரத்தில் தங்கம் வாங்குவது சிறந்தது என்றும் கூறியுள்ளார்.