தெற்கு ரயில்வே தென் மாவட்டங்களுக்கு கோடைகள் முறையை முன்னிட்டு பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் – நெல்லை இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறை ஆரம்பித்துள்ள நிலையில் விடுமுறைக்குச் செல்லும் பயணிகளுக்காக சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை ஆரம்பித்துள்ள நிலையில் பொதுமக்கள் விடுமுறை தினத்தை கொண்டாடும் விதமாக சுற்றுலா செல்வார்கள் இதற்காக சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்குவது வழக்கம் அதை தொடர்ந்து கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் எண் ( 06070 ) இந்த சிறப்பு ரயில் இயங்குவதற்கான தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 11, 18, 25 மற்றும் மே மாதத்தில் 2,9, 16, 23 ஆகிய வியாழக்கிழமை இயக்க உள்ளதாகவும் நெல்லையில் மாலை 6:45 மணிக்கு புறப்படும். இந்த சிறப்பு முறையில் சென்னை எழும்பூருக்கு காலை 8.30 மணிக்கு சென்றடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் எண் ( 06069 ) ஏப்ரல் மாதத்தில் 12, 19, 26 தேதிகளிலும் மே மாதத்தில் 3, 10, 17, 24, 31 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயிலானது சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு காலை 7.10 மணிக்கு சென்றடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.