சிவராத்திரி மற்றும் முகூர்த்த நாட்களைத் தொடர்ந்து வருகின்ற வாரங்களில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 360 சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டார்.
சென்னையில் இருந்து பயணிகள் சொந்த ஊருக்கு செல்வதை தொடர்ந்து போக்குவரத்து கழகம் சிறப்பு விரைவு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளை தொடர்ந்து கூடுதலாக 360 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் வருகின்ற வாரம் சிவராத்திரி மற்றும் முகூர்த்த நாட்களுக்கு சிரமம் இன்றி சொந்த ஊர்கள் மற்றும் கோவில் தளங்களுக்கு சென்று வர ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, திருவண்ணாமலை, கும்பகோணம், திருநெல்வேலி, மதுரை, , நாகர்கோயில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல இன்று முதல் 270 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. இதன் காரணமாக பயணிகள் எந்த ஒரு சிரமமும் இன்றி சொந்த ஊருக்கு செல்ல சௌகரியம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாளை 390 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் சனிக்கிழமை 430 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.