அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 37,576 அரசு பள்ளிகள் பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வருகின்ற கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர் மிக ஆர்வத்துடன் சேர்த்து வருகின்றனர். தற்பொழுது வரை 1. 04 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவலை வெளியிட்டுள்ளது.