தமிழ்நாடு அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதை தொடர்ந்து சென்னையில் பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில் மெட்ரோ ரயில் என அனைத்திலும் புதிய திட்டமாக ஒரே டிக்கெட் கொண்டு வரப்படும் என்றும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தனி செயலி உருவாக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
மேலும் முதல் கட்டமாக சென்னை மாநகர பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பேருந்துகளில் கருவி ஒன்றை ஸ்கேன் செய்தால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்ற டிஜிட்டல் வசதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்த முறையானது பின்பற்றி வரும் நிலையில் தமிழ்நாட்டில் இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அரசு பேருந்துகளில் நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.