நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெப்பநிலையின் அளவானது நாளுக்கு நாள் உச்ச நிலையை அடைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலையின் அளவானது தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் சில பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமானது பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்த நிலையில் வெப்ப அலையின் தாகமானது சற்று குறைந்திருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக வெப்பநிலையின் அளவானது அதிகரித்துள்ளது.
நாட்டில் பல பகுதிகளின் வெப்பநிலையின் அளவானது சதத்தை தொட்டுள்ள நிலையில் 54 பேர் வெப்பநிலையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே பீகாரில் வெப்ப நிலையானது உச்சத்தை தொட்ட நிலையில் வெப்ப அலையின் காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெப்ப அலையின் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.