தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்பொழுது தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டாவை நோக்கி நகர்வதால் டெல்டாவில் அதிக கன மழையானது பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என்றும் மக்கள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்வது நல்லது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின்பு புயலாக மாறுமா என்று வருகின்ற நாட்களில் கணிக்கப்படும். என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து 5 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் மதியம் மேற்கு மற்றும் வங்க கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.