குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தற்பொழுது தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு அதி கனமழையானது கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழையானது சென்னையை வாட்டி வதைத்தது தற்பொழுது சென்னையை மிஞ்சும் அளவிற்கு தென் மாவட்டங்களில் அதிக கன மழையானது வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 93.2 செ.மீ மழையானது பதிவாகியுள்ளது. அதேபோல் திருச்செந்தூரில் இதுவரை 67.9 செ.மீ அதிக கன மழை ஆனது பதிவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ வைகுண்டத்தில் தற்பொழுது வரை 61.8 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் தாழ்வான பகுதியில் வசித்து வந்த 7500 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மீட்பு பணியானது தீவிர படுத்தப்பட்டுள்ளது.