சில நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆந்திராவில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் பெண்கள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியின் விடுதி கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை பார்த்து மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். பெண்கள் விடுதி கழிவறையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்ததாகவும், சில மாணவர்கள் இந்த வீடியோக்களை கைதான மாணவனிடம் இருந்து வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; எங்களுக்கு நீதி வேண்டும், என்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்தது.
போலீசார் விசாரணை:
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ’பொருத்தப்பட்ட கேமராவில் வீடியோக்கள் எதுவும் பதிவாகவில்லை’ என தெரியவந்துள்ளது. இதுகுறித்து கிருஷ்ணா மாவட்ட எஸ்பி கந்தாதர் ராவ், “எங்கள் சோதனையில் பெண்கள் விடுதிகளில் மறைத்து வைக்கப்பட்ட கேமராக்கள் எதுவும் கிடைக்கவில்லை. சந்தேகத்திற்குரிய மாணவர்களின் மடிக்கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களை மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் முன்னிலையில் சோதனை செய்தோம். வீடியோக்கள் எதுவும் கிடைக்கவில்லை. மாணவிகள் கவலைப்பட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார். என்றாலும், இச்சம்பவம் தொடர்பாக, பிடெக் இறுதியாண்டு படிக்கும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மூத்த மாணவர் ஒருவரை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவரது மடிக்கணினி மற்றும் மொபைல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் வீடியோக்கள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அக்கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதை தொடர்ந்து, மாணவிகள் பலர், அக்கழிவறைகளையே பயன்படுத்தவே அச்சப்படுவதாகவும், பெரும்பாலும் அப்பகுதிகளைத் தவிர்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், பெங்களூருவில் உள்ள பிரபல காபி ஷாப் ஒன்றின் கழிப்பறையில், குப்பைத்தொட்டியில் ஸ்மார்ட் போன் மூலம் ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
[14:58, 8/30/2024] Ch_Karuppasamy IBC: இந்தியாவிலேயே பெரிய பொருளாதார மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது இடம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாட்டில் வெளிநாட்டிலிருந்து முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதுவரை இன்று (30.08.2024) 6 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், சென்னை, மதுரை மற்றும் கோவையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அமெரிக்காவிற்கு நான் வந்திருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் நான். 75 ஆண்டுகள் பழமையான அரசியல் இயக்கமான திமுகவின் தலைவர் நான். இப்போது தமிழ்நாட்டை 6வது முறையாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறோம். இந்திய நாட்டில் பல முறை எங்களது கூட்டணி பிரதமர்களை உருவாக்கி ஆட்சி அமைத்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்துள்ளார். 1971ம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது அமெரிக்காவிற்கு வருகை தந்தார். இப்போது நான் வந்துள்ளேன். இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. 48% நகரமயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக அளவில் நகரமயமாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு. நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சி மையங்கள் மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. மனித வளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமா தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் கிட்டதட்ட 20 % தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவின் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக உயர்கல்வியில் மாணவர்கள் சேரும் விகிதத்தில் 48% கொண்ட மாநிலம் தமிழ்நாடு”
என சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.