வர இருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பொது விடுமுறை அறிவித்த நிலையில் திரையரங்க ஊழியர்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் அன்று வருகின்ற 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அதிகார பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு திரைப்பட கண்காட்சியாளர் சங்கம் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகின்ற 19ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களும் தேர்தல் நாளன்று 19. 04. 2024 விடுமுறை அளிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.