நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில் கட்சி ரீதியாக பல முயற்சிகளை தற்பொழுது முன்னெடுத்து வருகிறார். வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் நடிகர் விஜய் மக்களின் ஆதரவை திரட்டி கொண்டிருக்கிறார். மேலும் தமிழக வெற்றி கழகத்திற்கான கொடி, சின்னம் உள்ளிட்ட நடவடிக்கைகளை வர இருக்கும் சில நாட்களில் முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இணைந்து கொள்வதற்கு புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். முதலில் நடிகர் விஜய் உறுப்பினராக இணைந்து அதற்கான வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தை பதிவு செய்திருந்தார்.
அதை தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பகிரிடப்பட்ட நிலையில் இதுவரை 50 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் 2 கோடி பேர் தமிழக வெற்றி கழகத்தை உறுப்பினராக இணைய இலக்கை நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செயலி தொடங்கிய இரண்டு நாட்களிலேயே 50 லட்சம் பேர் இணைந்துள்ளது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் வருகின்ற நாட்களில் கட்சி ரீதியான பல தகவல்களை நடிகர் விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.