நாடு முழுவதும் தற்பொழுது குரங்கு அம்மை தொற்றானது அதிகரித்து வருகிறது. மேலும் ஆப்பிரிக்கா நாடுகளில் குரங்கு அம்மை தொற்றானது வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. பொதுவாகவே ஆபிரிக்காவில் தற்பொழுது 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு Mpox எனப்படும் குரங்கு அம்மை நோய் தொற்றானது கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
இதுவரை 517 பேர் குரங்கு அம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை WHO வெளியிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 13 நாடுகளில் குரங்கு அம்மை தொற்றானது தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளதாகவும் மேலும் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு விட நடப்பாண்டில் குரங்கு அம்மை தொற்றின் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருவதாகவும் நாடு முழுவதும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் WHO அவசர எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குரங்கு அம்மை தொற்றின் அறிகுறியானது தோளில் சிறு சிறு கொப்பளங்கள் வருவது உடம்பு முழுவதும் நாளடைவில் கொப்பளங்கள் அதிகரித்து காணப்படும். மேலும் தலைவலி, உடல் சோர்வு, தொண்டை வலி போன்ற தொந்தரவுகள் காணப்படும்.