அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவிக்கான 1,768 காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி நாள் மார்ச் 15 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்த பிறகு ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால் மார்ச் 21 மற்றும் 23ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து தேர்வுக்கான கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால் கொடுக்கப்பட்டுள்ள மூன்று நாட்களில் சரி செய்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண், மின்னஞ்சல் மற்றும் முகவரி ஆகியவற்றின் பிழைகள் இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலோ மாற்ற இயலாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.