டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்களின் விலையை கூடுதலாக வைத்து விற்பனை செய்வது தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்பொழுது டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மார்க் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி மதுப்பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டெபிட் கார்டு மற்றும் கியூஆர் கோடு முறையில் முறையில் பணம் பரிவர்த்தனை செய்யும் வசதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மது பிரியர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை மூலம் தடுக்கப்படுவதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அனைத்து டாஸ்மார்க் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை இன்னும் தொடங்கப்படாத நிலையில் மது பிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைபெறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.