மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 39 கோடி செலவில் கலைஞர் நினைவிடமானது வைக்கப்பட்டு வந்தது.
தற்பொழுது கலைஞர் நினைவிடம் 97 சதவீதம் முடிவடைந்த நிலையில் தற்பொழுது திறப்பு விழா ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் மெரினாவில் தலைவர் கருணாநிதி நினைவிடம் வேலைகள் முழுமை பெறும் நிலையில் வருகின்ற 26 ஆம் தேதி திறப்பு விழா நடைபெற இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு முன்பு மிகப்பெரிய அளவில் பேனா சிலை அமைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது நிறைவு பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.