கள்ளக்குறிச்சியில் கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி 150 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் அதிக அளவில் கலக்கப்பட்டதால் சாராயம் விஷத்தன்மை உடையதாக மாறியது. இதன் காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 50க்கும் மேற்பட்டோர் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பால் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சட்டவிரோத முறையில் கலாச்சாராயம் விற்பனை செய்த கும்பலை பிடிக்க போலீசார் தொடர்ந்து தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.