காஞ்சிபுரத்தில் மும்மூர்த்தி கடவுள்களின் ஒருவரான திருமால் சிவபெருமானை வணங்குவதற்கு ஆமை உருவத்தில் வந்து அருள் பெறுவார். இந்த திருத்தலமானது காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோயில் 2005 – ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து 18 ஆண்டுகள் பிறகு நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது
கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் நாளை 01.02.2024 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து கச்சபேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் இதை கருத்தில் கொண்டு அருகாமையில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் பள்ளிக்கு வருவதற்கு சிரமம் ஏற்படுவதால் இந்த அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.