மிகப் பிரமாண்டமாக பல கோடி ரூபாய் செலவு செய்து சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டிய கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14 – ஆம் தேதி திரையரங்கில் வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட அன்று முதல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. முதல் நாளில் கங்கவா திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெற்றுள்ளதாகவும் அடுத்த நாளிலிருந்து வசூல் சரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கங்குவா திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ. 60 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும். தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலாக ரூ. 14 கோடி ரூபாய், இரண்டாம் நாள் வசூல் ஆக ரூ. 6 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. இரண்டு நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் ரூ. 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. பட குழுவினர் இடையே பெரும் குழப்பத்தையும் பின்னடையும் ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களில் கங்குவா திரைப்படம் வசூலை பெற்றுத் தருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.