காதல் கடல் கடந்தும் வெல்லும் என்ற வார்த்தை அனைவருக்கும் தெரிந்த ஒன்று இது போன்ற பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதுபோல காரைக்குடி பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் – மீனாள் இவர்களின் மகள் பிரியா அமெரிக்காவில் உள்ள பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றினார். நியூயார்க் பகுதியைச் சேர்ந்த சாம் என்ற இளைஞருக்கும் பிரியாவிற்கும் இணையதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது காதலாக மாறியது.
காரைக்குடி பகுதியைச் சேர்ந்த பிரியாவிடம் செட்டிநாடு பழக்க வழக்கமும், கலாச்சாரங்களும், வாழ்க்கை நடைமுறையை பற்றியும் பிரியாவின் காதலர் சாம் கேட்டு தெரிந்து கொண்டார். இதைப்பற்றி நன்கு தெரிந்து கொண்ட சாம் அந்த கலாச்சாரத்தின் மீது மரியாதை கலந்த காதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரியா மற்றும் சாம் திருமண ஏற்பாடுகள் செட்டிநாடு பாரம்பரிய வழக்கப்படி காரைக்குடியில் இவர்களது திருமணம் நடைபெற்றது. சாம் அவருடைய குடும்பத்தார்கள் அமெரிக்காவிலிருந்து காரைக்குடிக்கு வந்தனர்.
நேற்று காலை கோலாகலமாக சாம் பட்டு வேட்டி சட்டை உடுத்த பிரியா பட்டுப்புடவை உடுத்தி இவர்களின் திருமணம் செட்டிநாடு கலாச்சார வழக்கத்தின்படி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மணமகனின் குடும்பத்தார்கள் தமிழக பாரம்பரிய உடை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது.