கர்நாடக மற்றும் தமிழ்நாடு இடையே காவேரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சனைகள் இருந்து வருகிறது . இதனிடையே காவேரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து அக்டோபர் 15 ஆம் தேதி வரையில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி என்ற விதத்தில் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . ஆனால் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் தமிழ் நாட்டிற்க்கு தண்ணீர் திறந்துவிடுவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது .
இதனால் பெங்களூருவில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது . இதற்காக சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . பள்ளி மட்டும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிதுள்ளனர். மேலும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லைகளில் நேற்று முதல் இன்று வரையில் கர்நாடகா செல்லக்கூடிய வாகனங்களை திருப்பி அனுப்பப்பட்டுவருகிறது .