இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் சில முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னையில் முக்கிய இடமான மாமல்லபுரம், மெரினா கடற்கரை, எலியட்ஸ், பாலவாக்கம் கடற்கரை, பூங்காக்கள் என சென்னையில் முக்கியமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகள் அதிக அளவில் இன்று வருகை தருவதால் அத்துமீறும் காதல் ஜோடிகளை கண்காணித்து ரோந்து பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சிலர் மறைமுகமாக காதல் ஜோடிகளை புகைப்படம் எடுத்து மிரட்டும் செயலும் நடைபெறும் இது போன்ற சில பிரச்சனைகளை தடுக்கும் விதமாக போலீசார் சில முக்கிய இடங்களில் புவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.