தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அவரது 71 வது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை தொடர்ந்து எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி ஆசி பெற்றார்.
இதை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தற்பொழுது அவரது பிறந்தநாள் புகைப்படம் ஆனது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது.