கடந்த அக்டோபர் 31 – ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது முக்கிய பங்கு வகிப்பது பட்டாசு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை ஆர்வமாக வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள்.
தமிழ்நாடு அரசு சார்பில் தீபாவளி பண்டிகையை எப்படி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று பல வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வந்தனர். ஆனாலும் வழிகாட்டுதல்களை மீறி பட்டாசு வெடிப்பதான் விளைவாக பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் பொழுது ஏற்பட்ட விபத்து காரணமாக 300 – க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு கண் பார்வை பறிபோன அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறி உள்ளது. இதை தொடர்ந்து பலர் கண் கருவிழிகளில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.