தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகளிர்க்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமை தொகை வழங்கப்பட்ட வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பல லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். இதுவரை இரண்டு தவணை பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை கிடைக்காமல் இருப்பவர்கள் மேல் முறையீடு செய்து வருகின்றனர். இதுவரை மேல்முறையீடு செய்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மேல்முறையீடு செய்யப்பட்டு புதியதாக நவம்பர் மாதம் மட்டும் 7. 35 லட்சம் பயனாளர்கள் புதிதாக இந்த திட்டத்தில் இணைந்துள்ளதாகவும். மேலும் தற்பொழுது 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருவதாக தகவல் வெளியிட்டு உள்ளது.
மேலும் தற்பொழுது விடுபட்டுள்ள பெண்கள் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு எஸ் எம் ஸ் அனுப்பும் பணி தற்பொழுது தொடங்கி உள்ளதாக தகவலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மேலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள மனுக்களின் விவரங்கள் விரைவில் சரிபார்க்கப்பட்டு தகவல் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.