தமிழக அரசு பல திட்டங்களை கொண்டு வரும் நிலவில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதற்கு ஏற்றவாறு உடனுக்குடன் தீர்வு காணப்படும் வகையில் முதலமைச்சரின் முகவரி என்ற துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையின் மூலம் தமிழக மக்களின் எண்ணற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் அரசின் சேவைகள் உடனடியாக மக்களுக்கு சென்றடையும் வகையிலும் எந்த தடையும் ஏற்படாமல் தவிப்பதற்காக மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை கடந்த வருடம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வருடம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திட்டத்தை பற்றி முழு விளக்கத்தையும் மக்களுக்கு உரையாற்றுகிறார். மேலும் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்திற்கு சிறப்பு திட்டங்களையும் அறிவித்துள்ளார்.