தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறது. இதை தொடர்ந்து இன்று கலைவாணர் அரங்கில் 1598 பேருக்கும் அரசு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று வழங்குகிறார்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் நோக்கம் அரசு அலுவலகத்திற்கு மக்கள் தேடிச் சென்று அவர்களது குறைகளை மனுக்களாக கொடுப்பது நடைமுறையில் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கு மாற்றாக மக்களுடன் முதல்வர் இடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊர் மக்களையும் அதிகாரிகள் தேடிச் சென்று அவர்கள் இது குறைகளை மனுக்களாக பெறுவார்கள் இந்த மனுக்கள் ஒரு மாத காலத்திற்கும் தீர்வு அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி தற்பொழுது 1598 பேருக்கு அரசு பணி நியமன ஆணை இன்று வழங்குகிறார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் பணத்தை இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 1598 பேருக்கு பல்வேறு துறைகளில் பணி நியமனம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது