இந்திய வான்படை நடத்திய 92 – வது தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் வான்படையின் சாகச முயற்சியானது நடைபெற்றது. இதை காண்பதற்கு தமிழ்நாடு முழுவதிலிருந்து ஏராளமான மக்கள் சென்னை மெரினா கடற்கரையில் குவிந்தனர்.
இந்த வான் படை சாகச நிகழ்ச்சியானது தமிழ்நாட்டில் இருந்து 8000 போலீசார்கள் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் கூட்ட நெரிசல் அதிகரித்ததால் பல மக்கள் மயக்கம் அடைந்தனர். கூட்ட நெரிசல் சிக்கி 5 பேர் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சாகச நிகழ்ச்சியானது காலை 11 மணிக்கு தொடங்கி பந்தயம் ஒரு மணி வரை நடைபெற்றது.
வான் படை சாகச நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வெளியேறினர். இதனால் பட்டினம்பாக்கம், மெரினா காமராஜர் சாலை என அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தினால் பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் சோர்வடைந்தனர்.
மயக்கமடைந்தவர்களை ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 10 – க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது