மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பை தொடர்ந்து பொதுமக்கள் வீதி அடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தை சுற்றி திரிவதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை சுற்றித் துறையும் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் தீவிரமடைந்த நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுத்தை தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிப்பதற்கு தொலைபேசி எண் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி 9360889724 இந்த எண்ணிற்கு தெரிவிக்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம் தீவிரம் அடைந்த காரணத்தினால் இந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.