மருத்துவக் கல்லூரி மாணவி பரோட்டா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம்…
பரோட்டா…
உணவே விஷமாக மாறியது. கோவை மாவட்டம் தொப்பம்பட்டியில் வசித்து வந்தார் தியாகராஜன்.அவரது மகள் மகள் 22 வயதான கீர்த்தனா, கற்பகம் மருத்துவக் கல்லூரியில் M.B.B.S இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கீர்த்தனா நேற்று, இரவு இரவு உணவாக பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றார். காலையில் கீர்த்தனா வழக்கம்போல் எழும்பவில்லை. வெகு நேரம் ஆகியும் எழும்பாததை கவனித்த பெற்றோர் கீர்த்தனாவை எழுப்பிய போது கீர்த்தனா மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
பரிதாபமாக பிரிந்த உயிர்
மருத்துவக் கல்லூரி மாணவி கீர்த்தனாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பெற்றோர். கீர்த்தனா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் கூறினார்கள்.இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவக் கல்லூரி மாணவி கீர்த்தனாவின் உயிரிழப்பு குறித்து போலீசார் பலகோணத்தில் விசாரணைசெய்து வருகின்றனர்.கீர்த்தனா நேற்று இரவு சாப்பிட்ட பரோட்டா எங்கு தயார் செய்தது? என்பதை பற்றியும், உணவில் ஏதேனும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என்பதைப் பற்றியும் பல, கோணங்களில் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.