பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அலுவலகங்களில் விடுமுறை வழங்க கோரி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு ஒரு பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறை வழங்குவது அவர்களை ஒதுக்கி வைக்கும் நிலைக்கு தள்ளப்படும் மேலும் வேலை செய்யும் இடங்களில் பெண்களின் வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படும். என்று உச்ச நீதிமன்றம் பதிலளித்துள்ளது. மேலும் மனுதாரர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி இது தொடர்பான கோரிக்கையை முன் வைக்கலாம் என்றும் தலைமை நீதிபதி சந்திரா சூட் தகவலை வெளியிட்டுள்ளார்.