மிச்சாங் புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தது. இந்த நான்கு மாவட்டங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 6000 நிவாரண நிதியில் வழங்கியது. ரேஷன் அட்டை வைத்திருப்பவருக்கு உடனடி நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு ரூ. 6000 வழங்கியது. ரேஷன் அட்டை இல்லாதவருக்கு ரேஷன் கடை மூலமாக விண்ணப்ப படிவம் விநியோகிக்கப்பட்டது அதன் மூலம் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.
இதன் மூலம் அதிகாரிகள் மூலம் விண்ணப்பங்களை சரிபார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து 5.5 லட்சம் பேர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ரேஷன் அட்டை இல்லாமல் மிச்சாங் புயல் நிவாரண நிதிக்கு விண்ணப்பம் செய்தவருக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தற்பொழுது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.