மிக்ஜம் புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் மிகப்பெரும் அளவிற்கு பாதிப்புக்கு ஆளானது. மிக்ஜம் புயல் காரணமாக கனமழை இந்த நான்கு மாவட்டங்களிலும் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டது மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக பொது மக்களின் வாகனங்கள், சான்றிதழ், ஆவணங்கள், மின்சாதன பொருட்கள் என பொதுமக்களின் உடமைகள் இந்த கனமழையின் காரணமாக மிகுந்த அளவிற்கு சேதம் அடைந்தது.
இதை தொடர்ந்து தமிழக அரசு மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு ரூ. 6000 நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நிவாரணம் தொகை வாங்குவதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது,.