புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6000 வழங்கும் பணி துவங்கியுள்ளது . இதில் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்றால் செய்ய வேண்டியது .
மிக்ஜாம் புயலால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியும் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தும் இருந்த நிலையில் , அரசு அதற்கென நிவாரணத் தொகை வழங்கி வருகின்றனர் . ஒரு குடும்பத்திற்கு ரூ 6,000 கொடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் . இந்த தொகையை அருகில் உள்ள நியாய விலை கடைகளில் டோக்கன்கள் மூலம் கொடுத்து வருகின்றனர் .
மேலும் தொகை கிடைக்கவில்லை என்றால் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் இதற்கென அப்ளிகேஷன் உள்ளது . அதை பூர்த்தி செய்து கொடுத்தால் புயல் நிவாரணத் தொகை பெறலாம் என்று அறிவித்துள்ளனர் .