அமலாக்க துறையினர் சில மாதங்களாகவே அரசியல் கட்சிகளை சார்ந்த தலைவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவரது அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மற்றும் விழுப்புரம் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரமாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது.
அமைச்சர் பொன்முடி காரில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஆவணங்களை தடவியல் நிபுணர்கள் கொண்ட ஏதாவது டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை எதுவும் நடந்துள்ளதா என்று சோதிக்கப்படும் என்று அமலாக்கத்துறை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.