தூத்துக்குடி: கோவில்பட்டி காந்தி நகரில் வசித்து வந்தவர் கார்த்திக் முருகன் ,இவர் மனைவி பாலசுந்தரி இருவரும் கூலி தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அதில் இரண்டாவது குழந்தை கருப்பசாமி இவருக்கு வயது 10. கருப்பசாமி ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் . கடந்த சில நாட்களாக அம்மை நோயினால் பாதிப்புக்கு உள்ளானார் கருப்பசாமி, இதனால் பள்ளிக்கு விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து வந்திருக்கிறார். இதை அடுத்து நேற்று கார்த்திக் முருகனும் பாலசுந்தரியும் கூலி வேலைக்காக வெளியில் சென்றுள்ளனர். கருப்பசாமி மட்டும் வீட்டில் இருந்தார். பெற்றோர்கள் வேலை முடித்து வீட்டுக்கு வந்து பார்க்கும் பொழுது கருப்பசாமியை காணவில்லை. அக்கம் பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் கருப்பசாமியை பெற்றோர்கள் தேடி அலைந்து உள்ளனர் எங்கும் தேடி கிடைக்காத காரணத்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் போலீசார் வழக்கு பதிவு செய்து மயமான சிறுவனை தேடி வந்துள்ளனர்.
காணாமல் போன சிறுவன் கருப்பசாமி பக்கத்து வீட்டு மாடியில் மூச்சுப்பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார் கருப்பசாமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் கருப்புசாமி பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் பல மணி நேரத்திற்கு முன்பே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் சிறுவன் கழுத்தில் 1.5 சவரன் தங்க சங்கிலி மற்றும்1 கிராம் மோதிரம் அணிந்திருந்ததாகவும் அதை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் போலீசார் மேற்கொண்டு விசாரணை தொடர்ந்து வருகின்றனர்.