திமுகவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் மருமகன் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். மு.க. ஸ்டாலின் சகோதரி செல்வியின் கணவர் முரசொலி செல்வம் இன்று காலமான செய்தி திமுகவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
முரசொலி செல்வம் வயது 84 திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முரசொலி செல்வம் 55 ஆண்டுகள் முரசொலி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். திமுகவின் முரசொலி நிறுவனத்தின் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் சிலந்தி என்னும் கட்டுரையையும் எழுதியுள்ளார். தற்பொழுது பெங்களூரில் இருந்து இன்று அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது.