தமிழ்நாட்டில் இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணம் .
தமிழ்நாட்டில் அடுக்குமடி குடியிருப்புகளில் பொது வசதி மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது . இது அங்கு வசிக்க கூடிய நடுத்தர மக்களை பெரிதும் பாதிப்பதாக உள்ளது என பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்து வந்தனர் .
அந்தநிலையில் , தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை பரிசீலினை செய்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 அல்லது அதற்கு குறைவாகவும் , 3 மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள பொது பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் 15 பைசாவிலிருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது . இந்த மின் கட்டணம் இன்று முதல் தமிநாட்டில் அமலுக்கு வருகிறது .
previous post