கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவை எளிதக நிறைவிவேற்றும் வகையில் தமிழக அரசானது புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்ததை தொடர்ந்து, மேலும் 4 புதிய கல்லூரிகள் விரைவில் தொடங்கப்படும் அறிவித்துள்ளது.
கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் உரியது. ஆனால், கிராமப்புறங்களில் வாழும் மாணவர்களுக்கு உயர்கல்வி எப்போதும் எளிதாக இல்லை. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறுகிறது. கடந்த மே 26-ந்தேதி, தமிழக அரசு 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறந்து வைத்து, கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இத்துடன் மேலும் 4 புதிய கல்லூரிகள் விரைவில் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது, இது ஒரு வரலாற்றுச் சாதனை எனக் கருதலாம்.
முக்கிய பகுதிகளில் புதிய கல்வி மையங்கள்
கே.வி.குப்பம் (வேலூர்), துறையூர் (திருச்சி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), மற்றும் திருவண்ணாமலை போன்ற இடங்களில் புதிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் கல்வி வசதிகள் குறைவான கிராமப்புறங்களைச் சேர்ந்தவை.
கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
- கல்விக்காக தொலைதூரங்களுக்கு பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை
- சிறந்த பட்டதாரி ஆசிரியர்களிடம் நேரடி கற்றல் வாய்ப்பு
- குறைந்த செலவில் உயர்தர கல்வி
- பெண்கள் கல்விக்கான பங்கேற்பு அதிகரிக்கும்
- சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு இத்தகைய முயற்சிகள் அடித்தளமாகும்
அரசின் கல்விப் பார்வை
இந்த முயற்சிகள் அனைத்தும், “எல்லோருக்கும் கல்வி – சமத்துவ கல்வி” என்ற தமிழக அரசின் கொள்கையை வலுப்படுத்துகின்றன. கல்வியை ஒரு பிரத்தியேக உரிமையாக அல்ல, பொது உரிமையாக மாற்றும் இந்த திட்டங்கள், கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத மாற்றங்களை ஏற்படுத்தும்.
புதிய அரசு கல்லூரிகள் திறக்கப்படுவது, சாமானிய மக்களின் வாழ்வில் கல்வி என்பது கனவாக இல்லாமல் நனவாக மாறுகிறது என்பதற்கான சாட்சியம். இப்போது, கிராமங்களில் இருந்து கிளம்பும் மாணவ, மாணவிகள் உலக அளவில் போட்டியிடும் திறனை பெறுவார்கள். கல்வி என்பது சாதி, பணம், பகை ஆகியவற்றின் எல்லைகளை தாண்டி ஒவ்வொருவரையும் ஒளிவிடும் ஒளியாக இருக்க வேண்டும். அந்த வழியில் தமிழ்நாடு பயணித்து கொண்டிருக்கிறது.