தமிழ்நாட்டில் அதிக அளவில் பள்ளி மாணவிகளுக்கான பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது இதை தடுக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை பள்ளி வாகனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை வழி வகுத்துள்ளது.
பள்ளி வாகனங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. பள்ளி வாகனங்களுக்கான கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு….
பள்ளி வாகனங்களில் இனிமேல் கண்டிப்பாக ஒரு பெண் உதவியாளர் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளனர். 10 ஆண்டுகள் அனுபவம் மிக்க கனரக வாகன டிரைவர்களை மட்டுமே பள்ளி வாகனங்களில் ஓட்டுனராக பணியாற்ற வேண்டும்.
பள்ளி வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை பணியில் அமர்த்துவதற்கு முன்பாக அவர் மீது ஏதேனும் குற்ற நடவடிக்கை இருக்கா என்று முழுமையாக சரிபார்த்த பின்பு மட்டுமே ஓட்டுனரை பணியில் அமர்த்த வேண்டும்.
பள்ளி வாகனங்களில் பணியாற்றும் டிரைவர் மற்றும் உதவியாளர்களுக்கு கண்டிப்பாக போக்சோ சட்ட விதிகள் தெரிந்திருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மிகவும் அவசியம்.