குடியரசு தினத்தை முன்னிட்டு, தெற்கு ரயில்வே பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கும், மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்
புறப்படும் தேதி: ஜனவரி 24, 2025
புறப்படும் நேரம்:இரவு 10:40 மணிக்கு
சென்று சேரும் நேரம்:மறுநாள் மதியம் 12:00 மணிக்கு
கன்னியாகுமரி – தாம்பரம் சிறப்பு ரயில்:
புறப்படும் தேதி:ஜனவரி 26, 2025
புறப்படும் நேரம்:இரவு 8:30 மணிக்கு
சென்று சேரும் நேரம்: மறுநாள் காலை 8:30 மணிக்கு
இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், அரியலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரியை சென்றடையும்.
சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் சிறப்பு ரயில்:
புறப்படும் தேதி:ஜனவரி 24, 2025
புறப்படும் நேரம்:இரவு 11:50 மணிக்கு
சென்று சேரும் நேரம்:மறுநாள் மாலை 6:00 மணிக்கு
திரும்பும் ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து ஜனவரி 26 அன்று புறப்பட்டு, மறுநாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் சென்ட்ரல், அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கொச்சிவேலியை சென்றடையும்.
பயணிகள் இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்தி, தங்களின் பயணத்தை சீராகச் செய்யலாம். முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும்.