ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யப்படுவதாக செய்தி பரவி வருகிறது. இது தொடர்பாக டாஸ்மார்க் நிறுவனம் தற்பொழுது விளக்கம் கொடுத்துள்ளது. மதுபானங்கள் வீட்டுக்கு சென்று டோர் டெலிவரி செய்வதற்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து டாஸ்மார்க் நிறுவனம் ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யப்படும் என்ற தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்வதற்கான திட்டம் ஏதும் இல்லை என்றும் டாஸ்மார்க் நிர்வாகம் விளக்கத்தை கொடுத்துள்ளது.