தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாகவே தமிழக முழுவதும் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை வரை பெய்து வந்த நிலையில் தற்பொழுது தமிழகத்திற்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதலே ஒரு சில பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு நாகை கடலூர் மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதை தொடர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை 22.11.2023 மற்றும் நாளை மறுநாள் 23.11.2023 ஆகிய இரு தினங்களும் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.